பேனாவை ஏந்தும் ஊடகவியலாளர் மீது துப்பாக்கிக்கு பதிலாக மீண்டும் வாளால் அடக்கி ஒடுக்க முயற்சி!!

                                                                                           - செ.துஜியந்தன் -

கடந்த காலத்தில் ஊடகவியளார் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தி படுகொலை செய்தார்கள் தற்போது நல்லாட்சியில் ஊடகவியலாளர்கள் மீது வாளால் வெட்டி படுகொலை செய்ய ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவே யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மீது நடாத்தப்பட்ட வாள் வெட்டை பார்க்கப்படவேண்டும். எனவே ஊடகவியலாளர் மீதான தாக்குதல் சம்பவம்பவத்தை அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ;ஒன்றியம் வன்மையாக கண்டிப்பதாக ஒன்றியத்தின் தலைவர் கனகராசா சரவணன் தெரிவித்தார். 

யாழ்பாணத்தில் ஊடகவியலாளர் மீது இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தை கண்டித்து மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ;ஒன்றியம் ஊடக அறிக்கை ஒன்றை இன்று (28) திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது 

இந்த நாட்டில் 1985 ம் ஆண்டு டிசம்பர் 25 ம் திகதி அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்றைச் சோர்ந்த க தேவராசா வீரகேசரி ஊடகவியலாளர் மீது ஆரம்பிக்கப்பட்ட படுகொலை 2009 ஆண்டு சசிமதன் வரை 45 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த காலப்பகுதியில் பல ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல் பல ஊடகவியலாளர் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது 

ஆனால் மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதலை மேற் கொண்டுவந்ததுள்ளது வரலாறு இருந்தபோதும் தற்போது நல்லாட்சி அரசாங்கம் படுகொலை செய்யப்பட் ஊடகவியலாளர் மீது இடம்பெற்ற விசாரணைகள் இன ரீதியாக பக்கச் சார்பாகவே இடம்பெறுகின்றது 

36 தமிழ் ஊடகவியலாளர் கள் இதுவரை படுகொலை செய்யப்பட்டுள்ளனர் இவ் படுகொலை தொடர்பாக எந்த விசாரணையும் இடம்பெறவில்லை என்பது மிகவும் ஒரு கவலைக்கிடமான விடயம் 

இவ்வாறன நிலையில் தற்போது மீண்டும் துப்பாக்கிக்கு பதிலாக வாள் ஏக்கப்பட்டு போனவை ஏந்தும் எங்களை மீண்டும் வாளால் அடக்கி ஒடுக்க முற்படுவதாக நாங்கள் கருதுகின்றோம் 

எனவே யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மீது இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை வேண்டும் அத்தோடு சம்மந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

No comments

Powered by Blogger.