மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


தீக்கிரையாக்கப்பட்ட குடியிருப்பு!!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுக்கலை, கேனஸ் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குடியிருப்பு முற்றாக எரிந்துசாம்பலாகியுள்ளது. 

இன்று (02) அதிகாலை 02 மணியளவில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

திடீரென தீ பரவியதால் வீட்டில் இருந்த பெறுமதிமிக்க பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளதுடன் சம்பவத்தில் 06 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன் சம்பவம் தொடர்பான விசாரணையை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.