தமிழகம்; சேலம்மாவட்டம் ஆத்தூரில் 13வருடத்தின் பின்னர் கடுமையான மழை! இலங்கை புண்ணியரெத்தினம் சுவாமிகளின் அருளே என மக்கள் தெரிவிப்பு!!

                                                                - தமிழக செய்தியாளர்-
தமிழகத்தின் சேலம் மாவட்டம் ஆத்தூர் கிராமம் சுமார் பதின்மூன்று ஆண்டுகளாக மிகுந்த வரட்சியில் காணப்பட்ட கிராமமாகும் தீடீரென கடும் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் காணப்படுவதாகவும் இந்த திடீர் மழைக்கான மகிழ்ச்சி பற்றி பிரதேசவாழ் மக்களிடம் வினவியபோது 

ஆத்தூரைச் சேர்ந்த ஜெயவேல் என்பவர் கருத்து தெரிவிக்கையில்....

இலங்கையிலுள்ள  சற்குரு புண்ணியரெத்தினம் சுவாமிஜி அவர்களை நான் சுமார் இரண்டரை வருடங்கள் முன்பு சந்தித்து அவர் ஆசியினைப் பெற்றிருந்தேன் மீண்டும் அவரது இறை சக்தியறிந்து தொடர்பினைப் பேணியே வந்தேன் கடந்த முதலாம் திகதி தொலைபேசியில் சுவாமிஜியோடு தொடர்பினை ஏற்படுத்தி இங்குள்ள வரட்சி நிலையினை எடுத்துரைத்து மக்களின் கஸ்ர நிலையினை எடுத்துக்கூறி இந்த வரட்சி நிலையினை மாற்ற வழியில்லையா குருதேவா என பிரார்த்தித்தேன்!

அன்று சுவாமி செய்த ஆசீர்வாதம் அருள் என்பன இணைந்து இன்று பெரும் மழையாக பொழிவதனை மக்கள் கண்டு வியக்கின்றனர் சுவாமிஜியை பற்றி அறிந்தவர்கள் அவரோடு தொடர்பு கொண்டு பேசிட ஆவலாக உள்ளதாகவும் பக்தரானவர் கூறினார்.

அது மட்டுமல்ல சிவகாசி எரிச்சனத்தை, திண்டுக்கல் சின்னாளப்பட்டி கிராமத்திலும் தற்போது மழை பெய்வதாக சுவாமிஜியின் பக்தர்களான திரு. ராமச்சந்திரன் என்பவரும் திரு.ஞானவேல் என்பவரும் மகிழ்ச்சியில் அவர்களை அண்டிய இலங்கை நண்பர்களிடம் கூறியதாக அவர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பிலும் மப்பும் மந்தாரமுமான கால நிலை நிலவுகிறதையும் அவதானிக்கமுடிகிறது

இவ்வாறு இலங்கையின் மட்டக்களப்பில் பெரிய உப்போடையில் ஒரு மூலையில் அமர்ந்திருந்து உலக மக்களின் நன்மைக்காக அவர்களை பிரார்த்தனைகளை செய்யவைத்து  இறையருளைப் பெற செய்து நல் வழி காட்டி வருபவர்தான் சற்குரு மகா யோகி திரு எஸ்.புண்ணியரெத்தினம் சுவாமிகள். அவர் அடிச்சுவட்டினை பின்பற்றி அனைவரும் பெருவாழ்வு வாழ்வோமாக
மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் திளைக்கிறார்கள்No comments

Powered by Blogger.