சமூர்த்தி வங்கிகளை ஒழுங்குபடுத்த கண்காணிப்புக் குழு!!

சமூர்த்தி வங்கியை ஒழுங்குறுத்தவதற்காக இலங்கை மத்திய வங்கி, நிதி அமைச்சு மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய கண்காணிப்பு குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (11) காலை நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார். 

மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் இன்று (11) பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி இதனை குறிப்பிட்டார். 

திவிநெகும சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சமூர்த்தி வங்கி முகாமைத்துவக் குழுவினால் நிர்வகிக்கப்படுகின்றது. இந்த குழுவில் இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதியமைச்சின் பிரதிநிதிகள் இருவர் இடம்பெற்றுள்ளனர். 

இதன் நிர்வாகத்தை மேலும் பலப்படுத்தி பொதுமக்களுக்கு பரந்த சேவையை வழங்கும் நோக்கத்தில், சமூர்த்தி வங்கிக்காக புதிய கண்காணிப்பு குழு அமைப்பதற்கான ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.