மட்டு- வெல்லாவெளியில் இடம்பெற்ற நடமாடும் சேவை!!


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த கால யுத்த சூழ் நிலை காரணமாக ஆவணங்களை இழந்தவர்களுக்கான நடமாடும் சேவை நேற்று(20) ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பு வெல்லாவெளியில் நடை பெற்றது.

தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலத்திற்குட்ட வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

பதிவாளர் திணைக்களம், சமுர்த்தி திணைக்களம், பொலிஸ் திணைக்களம், மின்சார திணைக்களம், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை உட்பட 26 திணைக்களங்கள் இன்று தமது சேவையினை வழங்கியது.இவ் நடமாடும் சேவையின் ஆரம்ப நிகழ்வு தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் அரச கரும மொழிகள் பிரதிஅமைச்சர் அலி சாகிர் மெளலானா மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமார் 
மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந் போரதீவு பற்று பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி,போரதீவு பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ரஜனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இன்று காலை முதல் மாலை வரை 800க்கும் மேற்பட்டவர்கள் பங்கு கொண்டு பயன் பெற்றுள்ளனர். அத்துடன் இந்த நிகழ்வின் போது 5 ஜோடிகளுக்கு பதிவு திருமணம் பதிவு திருமணம் செய்து வைக்கப்பட்டு பதிவு சான்றிதழும் வழங்கப்பட்டது. இதன் போது முதியவர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கி வைக்கப்பட்டன.
No comments

Powered by Blogger.