8700 விமானப் பயணங்களை செய்த மத்தள விமான நிலையத்துக்கு ஏற்பட்ட நிலை!!மத்தள விமான நிலையத்தில் இதுவரை காலமும் தரையிறக்கப்பட்டு வந்த ஒரேயொரு விமானமான பிளைய் டுபாய் விமானம் நேற்று (08) முதல் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்குவதை நிறுத்தியுள்ளது. 

அந்த விமான நிறுவனம் விடுத்த கோரிக்கைக்கு இலங்கை அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்பட்டதன் படி பிளைய் டுபாய் விமானங்கள் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்குவதை நிறுத்தியுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மாத்திரம் தரையிறக்கப்பட்டுக் கொண்டிருந்த பிளைய் டுபாய் விமானங்கள், 2013ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் படி இதுவரை காலமும் மத்தள விமான நிலையத்திற்கு வந்துள்ளன. 

அத்துடன் ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்துக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் ஒவ்வொரு நாளும் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு வந்துள்ளதுடன், கடந்த 2015ம் ஆண்டு தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் அதுவும் நிறுத்தப்பட்டுள்ளது. 

மத்தள விமான நிலையம், கடந்த ஐந்து ஆண்டு காலங்களில் 01 இலட்சத்து 71 ஆயிரத்துக்கு அதிகமான பயணிகளுக்கு சேவை வழங்கியுள்ளதுடன், 8700 விமானப் பயணங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Gator Website Builder