மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்துக்கு பூட்டு!!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் இயங்கி வரும் தொடர்பாடல் மற்றும் வணிகக் கல்வி கற்கைகள் பீடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

அந்த பீடத்தின் சகல கல்வி ஆண்டு கற்கை நெறிகளும் இன்று (09) முதல் மறு அறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக மூடப்படுவதாக பீடாதிபதி வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

அந்தப் பீடத்தின் மாணவர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 01.05.2018 அன்று முதல் கற்றல் நடவடிக்கைகளை புறக்கணித்து வருவதாகவும், அதனை முடிவுக்கு கொண்டு வர பல்கலைக்கழகம் பல கட்டப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட போதிலும் மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளை புறக்கணித்து வருவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.