மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி புதிய உலக சாதனை!!

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அதிக ஓட்டங்களை அடித்து புதிய உலக சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளது. 

இங்கிலாந்து அணி 46.2 ஓவர்களில் 3 விக்கட் இழப்பிற்கு 453 ஓட்டங்களை அடித்து இந்த புதிய உலக சாதனையை நிலைநாட்டியுள்ளது. 

அவுஸ்திரேலியாவிற்கு எதிராக இங்கிலாந்தின் நொட்டிங்ஹமில் நடக்கும் 3 ஆவது ஒருநாள் போட்டியிலேயே இந்த உலக சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது. 

இங்கிலாந்து 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 481 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது. 

இங்கிலாந்து அணி சார்ப்பில் அலெக்ஸ் ஹேல்ஸ் 147 ஓட்டங்களையும், ஜொனாதன் பேர்ஸ்டோ 139 ஓட்டங்களையும், ஜேசன் ரோய் 82 ஓட்டங்களையும் மற்றும் இயோன் மோர்கன் 67 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

இங்கிலாந்து அணியின் இன்னிங்ஸில் 21 ஆறு ஓட்டங்களும், 41 நான்கு ஓட்டங்களும் அடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.