மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்தி ஒருவரை கொன்ற வாகன சாரதி!!


திட்டமிட்டு ஒரு விபத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் ஒருவரை கொன்ற சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கைகளை பாணதுறை வடக்கு பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். 

பாணதுறை, வடக்கு கொரகபல பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மீது, பௌசர் வாகனம் ஒன்றால் மோதி இந்த விபத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

சம்பவத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி பாணதுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர் பாணதுறை, மீரியவத்த பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

ஒரே அலுவலகத்தில் வேலை செய்யும் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் பௌசர் வாகன சாரதி இடையே நேற்று (16) காலை அலுவலகத்தில் வாய்த்தர்க்கம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதனால் பௌசர் வாகன சாரதி, திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்தி முச்சக்கர வண்டி சாரதியை கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

விபத்தை ஏற்படுத்திய பௌசர் வாகன சாரதி தலைமறைவாகி உள்ளதாகவும் சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் பாணதுறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.