மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது!

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடி வந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் தற்போது விஸ்பரூபம் எடுத்திருக்கும் பிரச்னை சென்னை-சேலம் 8 வழி பசுமைச் சாலைத் திட்டம். சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக சுமார் 277 கி.மீ தொலைவில் இச்சாலை அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்துக்காக விவசாய நிலங்களும் மலைகளும் கையகப்படுத்தவுள்ளதாகவும் அவ்வாறு கையகப்படுத்தினால் இயற்கை வளங்களும் விவசாயமும் பாதிக்கப்படும் என்று கூறி இத்திட்டத்துக்குப் பலரும் எதிர்ப்புக்குரல் கொடுக்கின்றனர். சட்டப்பேரவையில்கூட இந்தப் பிரச்னை எதிரொலித்தது. இத்திட்டம் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி, "பொதுமக்களின் பயன்பாட்டுக்காகவே பசுமை வழிச்சாலை அமைக்கப்படுகிறது" என்று விளக்கம் அளித்திருந்தார். 

இந்நிலையில், பசுமை வழிச் சாலைத் திட்டத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார் பியூஷ் மானுஷ். கடந்த மாதம் சேலம் சென்று அங்குள்ள நீர் நிலைகளைப் பார்வையிட்ட நடிகர் மன்சூன் அலிகான் சென்னை - சேலம் 8 வழி பசுமைச் சாலை திட்டத்துக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருந்தார். சில நாள்களுக்கு முன்னதாகப் பசுமை வழிச் சாலைத் திட்டத்துக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதாக ஜூன் 16-ம் தேதி போலீஸார் மன்சூர் அலிகானைக் கைது செய்திருந்தனர். இந்தநிலையில், பியூஷ் மானுஷும் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரிடம் சேலம் ஓமலூர் காவல்நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் தொடர்ந்து கைது செய்யப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.