குருமண்வெளியில் வருடாந்தசங்காபிஷேகம் நிகழ்வு !!

                                                                                          - செ.துஜியந்தன் -
குருமண்வெளி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த 1008 சங்காபிஷேகமும், பாற்குடபவனியும் எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

ஆலயபிரமதகுரு சிவஸ்ரீ வே.குபேந்திரன்குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ள சங்காபிஷேக நிகழ்வில் காலை 8 மணிக்கு ஸ்ரீமகாவிஸ்ணு ஆலயத்திலிருந்து பாற்குடபவனி ஆரம்பமாகி ஸ்ரீ பத்திர காளியம்மன் ஆலயம் சென்று பிரதான பிள்ளையார்ஆலயத்தை சென்றடைந்ததும் சங்காபிஷேகம் விசேட பூசைகள் நடைபெறவுள்ளது. அன்றையதினம் ஆலய நிர்வாக சபையினரால் அன்னதான வைபவம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Powered by Blogger.