நீரழிவும் சமூகமும் நூல் வெளியீடு!!

                                                                                  - செ.துஜியந்தன் -
நீரழிவும் சமூகமும் நூல் வெளியீடும் விழிப்புணர்வுக்கருத்தரங்கும் எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப.4மணிக்கு குருக்கள்மடம் விபுலானந்தா முதியோர் இல்லத்தில் நடைபெறவுள்ளது.
கிழக்குப்பல்கலைக்கழக மருத்துவ பீட விரிவுரையாளர் டாக்டர் கேஅருளானந்தம், டாக்டர் ஜீ.கிஷோகாந் ஆகியோர் எழுதிய இந் நூல்வெளியீட்டு நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக கிழக்குப்பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.திருக்கணேஸ், லண்டன் வைத்திய நிபுணர் எஸ்பூலோகநாதன், டாக்டர் திருமதி காந்த நிரஞ்சன், டாக்டர் என்.நிரஞ்சன், டாக்டர் ராதா தருமரெட்ணம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். 

இங்கு பொதுமக்களுக்கு நீரழிவு தொடர்பான விளக்கவுரைகளும் துறைசார்ந்த வைத்தியநிபுணர்களினால் வழங்கப்படவுள்ளது. இந் நிகழ்வில் அனைவரையும் பங்குபற்றி பயன்பெறுமாறு டாக்டர் கே.அருளானந்தம் கேட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.