மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


பிறவியிலேயே வாய் பேச முடியாத ஐந்து மாத கர்ப்பிணி தாயை காணவில்லை! வாழைச்சேனையில் சம்பவம்!!

                                                    கல்லடி நிருபர்-க. விஜயரெத்தினம்
5மாதக் கற்பிணித்தாயை காணவில்லை என உறவினர்கள் வாழைச்சேனை பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இச்சம்பவம் நேற்று மட்டக்களப்பு பொலிஸ் பிரிவில் உள்ள ஜெயந்திரபுரத்தில் இடம்பெற்றுள்ளது.

5மாதக் கற்பிணியான களுவன்கேணியை சேர்ந்த க.புஸ்பரேகா என்பவரே நேற்று (24.06.2018)அதிகாலை 5:30 மணியளவில் மட்டக்களப்பு ஜெயந்திபுரத்தில் வைத்து காணாமல் போய்யுள்ளார்.

ஐந்து மாத கர்ப்பினியான புஸ்பரேகா பிறவியில் இருந்து வாய்பேச முடியாதவர் என்பது குறிப்பிடதக்கது.இவரை கண்டவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலயத்துக்கோ அல்லது 0778289659 எனும் தொலைபேசி இலக்கத்துக்கோ தொடர்பு கொண்டு தகவல்களை அறிவிக்கலாம்.இவர் சம்பந்தமாக பொலிசார்,உறவினர்கள் தேடிக் கொண்டிருக்கின்றார்கள்.வீதியிலோ அல்லது வேறு இடங்களிலோ நீங்கள் இவரைக் கண்டால் அறிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

No comments

Powered by Blogger.