நற்பிட்டிமுனையில் மூன்று பிள்ளைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை!!


                                                                         - நற்பிட்டிமுனை நிருபர் -
நற்பிட்டிமுனை கிராமத்தில் நேற்று (22) மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். நற்பிட்டிமுனை சிவசக்தி வித்தியாலய வீதியைச் சேர்ந்த குணரெட்ணம் சீதேவிப்பிள்ளை எனும் 46 வயதுடைய குறித்த பெண் நுண்கடன் மற்றும் வட்டிக்கடன் தொல்லையால் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இவருக்கு 17.15.11 வயதுகளில் மூன்று பெண் பிள்ளைகளும் இருக்கின்றனர். குறித்த தாய் நிதி நிறுவனங்களில் நுண் கடன்கள் பெற்றிருப்பதாலும் கடன் சுமை காரணமாக கடன்களை திருப்பி செலுத்துவதில் எதிர்நோக்கிய சிரமம் காரணமாக மன அழுத்தத்துக்குள்ளாகியிருந்துள்ளார்.

தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட உயிரிழந்த தாயின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருந்தது. பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.