திருகோணமலையில் இடம்பெற்ற மாட்டு வண்டிச் சவாரிப்போட்டி!!


தோப்பூர் பிரதேச மக்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான மாட்டு வண்டிச் சவாரிப் போட்டி திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று மாலை தோப்பூர் கரைச்சை மைதானத்தில் நடைபெற்றுள்ளது.

இதில் 25 மாட்டு வண்டிகள் போட்டியில் கலந்து கொண்டுள்ளதுடன், 50 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் இப்போட்டி தோப்பூரில் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், நிகழ்ச்சியில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர், மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம்.தாணீஸ், சேருநுவர பிரதேச சபை உறுப்பினர் ஏ.சி.எம்.அலி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
No comments

Powered by Blogger.