மட்டக்களப்பில் வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் தோணியில் சென்று விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர்!!

                                                                                                                                                               - செ.துஜியந்தன் -
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதினால் அந்நிலங்களில் விவசாயச்செய்கையினை மேற்கொண்ட விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு முகம்கொடுத்துள்ளனர். 

மண்முனை தென் எருவில் பற்றிலுள்ள குருமண்வெளி புதுவெளிக்கண்டம், மகிளுர் பெரியவெளிக்கண்டம், கவுடாதீவு, எருவில் ஆகிய பிரதேசங்களிலுள்ள வயல் நிலங்களே வெள்ளத்தில் மூழ்கிகாட்சியளிக்கின்றது.

மட்டக்களப்பில் முகத்துவாரம் வெட்டப்படாததினாலே தாம் இப்பாதிப்பிற்கு முகம் கொடுத்துள்ளதாகவும் இது தொடர்பில் அதிகாரிகள்மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரிடத்தில் முறைப்பாடு தெரிவித்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

தற்போது நீரில் மூழ்கியுள்ள நெற்கதிர்களை தோணிமூலம் சென்று அறுவடை செய்துவருகின்றனர். இவ்வாறு அறுவடைசெய்வதற்க்கு கூலியாட்கள் கூட தயங்குவதாகவும் வயலில் அட்டைகள் கடிப்பதாகவும் கூறுகின்றனர். அதிகாரிகளின் தவறுகாரணமாகவே இப்பாதிப்பிற்க்கு தாம் முகம்கொடுத்துள்ளதாக விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.0/Post a Comment/Comments

Previous Post Next Post