சைட்டம் பிரதான நிறைவேற்று அதிகாரி கைது!!


சைட்டம் நிறுவனத்தின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி மருத்துவர் சமீர சேனாரத்ன குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவர் சமீர சேனாரத்ன பயணித்த கார் மீது கடந்த 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் சைட்டம் நிறுவனத்திற்கு அருகில் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட சம்பவம் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம், மருத்துவர் சமீர சேனாரத்னவிடம் இதற்கு முன் விசாரணை நடத்தியிருந்தது.

இந்த விசாரணைகளின் அடிப்படையில் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சமீர சேனாரத்ன கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

Image result for arast

No comments

Powered by Blogger.