மரண தண்டனை அறிவிப்பு ஏன் விடுக்கப்பட்டது?

நாட்டில் நிலவி வரும் ஏனைய பிரச்சினைகளை மூடி மறைக்கும் நோக்கிலும் கவனத்தை திசை திருப்பும் நோக்கிலும் மரண தண்டனை குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தயாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்

மரண தண்டனையை அமுல்படுத்தும் அளவிற்கு இந்த அரசாங்கம் வலுவானது கிடையாது. இந்த அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே செயற்பட்டு வருகின்றது.

எனவே, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மரண தண்டனையை அரசாங்கம் நிறைவேற்றப் போவதில்லை.

நாட்டில் நிலவி வரும் பிரச்சினைகள் குறித்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கில் இந்த மரண தண்டனை பிரச்சினை கொண்டு வரப்பட்டுள்ளது.

அரச ஆதரவுடன் போதைப் பொருள் கடத்தப்படுவதாகவும் சில சந்தர்ப்பங்களில் சதொச நிறுவன பைகளில் போதைப் பொருள் கடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் வர்த்தகர்களை கொலை செய்வது இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.