கொழும்பு மக்களுக்கான முக்கிய அறிவித்தல்கொழும்பை அண்டிய பகுதிகளில் நாளை 9 மணித்தியால நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனைத் தெரிவித்துள்ளது.
நாளைய தினம் இரவு 9 மணி முதல் அடுத்துவரும் 9 மணித்தியாலங்களுக்கு குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, களனி பாலம் முதல் தெமட்டக்கொட வரையிலான பேஸ் லைன் வீதி மற்றும் அதன் கிளை வீதிகள், கொழும்பு செட்டியார் வீதி மற்றும் அதன் கிளை வீதிகள் உட்பட கொழும்பு 13,14,15 ஆகிய பகுதிகளிலும் குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.