பரபரப்புக்கு மத்தியில் ஐ.தே.காவுக்கு விஜயகலா அனுப்பியுள்ள கடிதம்!தமிழீழ விடுதலைப் புலிகளை மீள உருவாக்குவதே தமது நோக்கம் என தாம் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒழுக்காற்று விசாரணை குழுவுக்கு விளக்கமளித்துள்ளதாக அறியமுடிகின்றது.

இது குறித்து அவர் நேற்று முன்தினம் கடிதம் ஒன்றை குறித்த குழுவுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களில் நிகழ்ந்த சம்வங்கள் தொடர்பில் தமக்கு ஏற்பட்டிருந்த மன ஆதங்கத்தின் காரணமாகவே அவ்வாறானதொரு கருத்தை தாம் வெளியிட நேர்ந்ததாக விஜயகலா மகேஸ்வரன் குறித்த கடிதத்தில் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, விஜயகலா தெரிவித்த கருத்து தொடர்பில் இதுவரை 25 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதுடன், குறித்த வாக்கு மூலங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது.

இதேவேளை, குறித்த குழுவினர் நேற்று யாழ்ப்பாணத்திலுள்ள விஜயகலாவின் வீட்டிற்கு சென்று வாக்குமூலம் ஒன்றை பெற்றிருந்தது.

இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்னரே ஐக்கிய தேசியக் கட்சியின் ஒழுக்காற்று விசாரணை குழுவுக்கு விஜயகலா அனுப்பியுள்ள கடிதம் குறித்து செய்திகள் வெளியாகி உள்ளன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post