கழுத்தினை வெட்டி தற்கொலைக்கு முயன்ற 18 வயது யுவதி ! வவுனியாவை உலுக்கும் தற்கொலை கலாச்சாரம்!!

வவுனியா குழுமாட்டுச்சந்தி கணேசபுரத்தில் அமைந்துள்ள அன்பகமொன்றில் வசித்து வந்த பெண்னோருவர் கழுத்தினை வெட்டி தற்கொலைக்கு முயன்ற நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அன்பகத்தில் வசித்து வந்த 18வயதுடைய குறித்த பெண் கடந்த 29.08.2018 அன்று இரவு 9.00 மணியளவில் தனது கழுத்தினை அறுத்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு இரவு 9.30மணியளவில் வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.


சிகிச்சைகளின் பின்னர் தற்போது வைத்தியசாலையின் விடுதி 2 இல் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்கொலைக்கான காரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.