வெல்லாவெளி சின்னவத்தையில் யானைத்தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் பலி!

                                                                                     - க.விஜரெத்தினம் -
வெல்லாவெளி சின்னவத்தையில் இன்று அதிகாலை இடம்பெற்ற யானைத்தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 35கிராமம் கண்ணபுரத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் யானைத்தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் இன்று புதன்கிழமை(29.8.2018) அதிகாலை 3.45 மணியளவில் இடம்பெற்றிருக்கலாம் என வெல்லாவெளி பொலிசார் தெரிவிக்கின்றார்கள்.

இந்த யானைத்தாக்குதலில் துறை நீலாவணையைச் சேர்ந்தவரும்,35ம் கிராமத்தை சேர்ந்தவருமான இரண்டு பிள்ளைகளின் தந்தையான தம்பிராசா-குணராசா(வயது-46) என்பவரே ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.
தமக்கு உரித்தான பசுமாடுகளை பண்ணையடியில் பராமரித்து வந்துள்ள நிலையில் இன்று புதன்கிழமை அதிகாலவேளை வீட்டிலிருந்து புறப்பட்டு பண்ணையடிக்குச் குடும்பஸ்தர் சென்றிருக்கின்றார்.
இவ்வாறு செல்லும் பாதையில் யானை வழிமறித்து கடுமையாக தூக்கிவீசி தாக்கியுள்ளது.வீட்டிலிருந்து புறப்பட்டவர் நண்பகல் வரையும் வீடு திரும்பதாத நிலையில் அவரது உறவினர்கள் தேடிச்சென்று பார்தபோது பண்ணையடிக்குச் செல்லும் பாதையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இன்று பிற்பகல் 3.00 மணியளவில் சின்னவத்தையில் உள்ள பண்ணையடிக்கு அருகாமையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் வரட்சி காரணமாக காட்டுயானைகள் பொதுமக்களின் இருப்பிடங்களையும்,நீர்நிலைகளையும் நாடிவருவது அதிகரித்துள்ள நிலையில்தான் காட்டுயானை இந்த குடும்பஸ்தரை தாக்கியுள்ளது.

யானைத்தாக்குதலில் உயிரிழந்தவரின் சடலம் வெல்லாவெளி பொலிசாரால் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

No comments

Powered by Blogger.