களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் நூற்றாண்டு நிகழ்வும்! இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கி வைப்பும்!!

மட்டு- களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் நூற்றாண்டு நிகழ்வு மற்றும் வைத்திய அத்தியட்சகர் திரு.சுகுணன் அவர்களின் பிறந்த நாள் என இரு நிகழ்வுகளை ஒட்டி முதல் நிகழ்வாக வைத்தியசாலை வளாகத்தில் அமைந்திருக்கும் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடு இடம்பெற்றது அதனைத் தொடர்ந்து வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள வாகனத் தரிப்பிடப் பகுதியில் வைத்திய அதிகாரி திரு.சுகுணன் அவர்கள் முதலாவது மரக்கன்று நடுகையினை தொடங்கி வைக்க ஏனைய வைத்திய அதிகாரிகள் தாதியர்கள் பிரதேச சமூக ஆர்வலர்களால்  தொடர்ந்தும் மரக் கன்றுகள் நடப்பட்டன பின்னர் உன்னதமான இரத்த தான நிகழ்வும் இராணுவ மற்றும் இரத்த கொடையாளிகளினால் இரத்த வங்கிக்கு வழங்கி வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வெளி நோயாளர் சிகிச்சைப் பிரிவில் நோயாளர்களுக்கான இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு வைத்திய அதிகாரியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இந்த அடையாள அட்டையினைப் பெறும் நோயாளிகள் தமது ஜீவித காலம் வரைக்கும் அதனைப் பயன்படுத்தி எந்த வித இடையூறுகளுமின்றி வைத்தியத்தினையும் மருந்துகளையும் இலகுவாக பெற்றுக் கொள்ளலாம் அதே வேளை காலப் போக்கில் இலங்கையில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இதே இலத்திரனியல் அடையாள அட்டையினை பயன்படுத்தி ஒருங்கிணைந்த இணைய சேவையாக நோயாளிகளுக்கு வழங்கப்படும் என வைத்திய அத்தியட்சகர் திரு.சுகுணன் அவர்கள் தெரிவித்தார்.

அதே வேளை வைத்தியட்சகரின் பிறந்த நாளினையொட்டி பல மக்கள் பூங் கொத்து வழங்கியும் நேரில் வந்து வாழ்த்தியும் சென்றதனை காண முடிந்தது.

No comments

Powered by Blogger.