ஆலயக் கட்டுமானப் பணியில் பொது நலமாக களமிறங்கிய இளைஞர்கள்!!

மூதூர் முன்னம் போடி வெட்டை வழிவிடு விநாயகர் ஆலயத்தின் கட்டுமானப்பணிகளை அப்பகுதி இளைஞர்கள் ஒன்று கூடி மேற்கொண்டனர் நீண்டகாலமாக இவ்வாலயத்தின் பூர்வாங்கப் பணிகள் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கின்றது அரசியல் வாதிகள் நகர்புறங்களில் அள்ளி இறைக்கும் நிதிகளை என்ன செய்வது என்று தெரியாமல் திரும்பத் திரும்ப உடைத்து கோபுரங்களை கட்டுகின்ற.ஆலயங்கள் பெருமெடுப்பில் வானவேடிக்கை யானைஉலா நடாத்தும் ஆலயங்கள் கோடியாக பணத்தை செலவழிக்கும் தனிநபர்கள் இப்படியான ஆலயங்களிற்கு நிதிஉதவிகளை வழங்கி முன்னேற்றிவிட உதவிபுரியவேண்டும் என பணிவோடு கேட்டுக்கொள்கின்றோம்..

இதில் வேலைசெய்பவர்கள் அரச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்வதனால் இரவு நேரத்தில் இவ் ஆலயத் திருப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.