மட்டு- களுவாஞ்சிகுடி வீடொன்றில் பட்டப்பகலில் திருடர்கள் கைவரிசை!!

மட்டு- களுவாஞ்சிகுடி-08இல் அமைந்துள்ள வீடொன்றினுள் கொள்ளையர்கள் புகுந்து பல இலட்சங்கள் பெறுமதியான தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

இச் சம்பவமானது  இன்று (17/08/2018) முற்பகல் 10:30-12:00 மணிக்குள் இடம் பெற்றிருக்கலாமென களுவாஞ்சிக்குடி பொலிசாரின் முதற் கட்ட விசாரணைகள் முலம் அறிய முடிகிறது.

சம்பவம் தொடர்பான முழு விபரங்களை அறிய வீட்டு உரிமையாளரான ஆசிரியை திருமதி. மகேஸ்வரி அவர்களிடம் வினவிய போது....

இன்று காலை எமது உறவினர் ஒருவரின் வீடு குடி போகும் நிகழ்வொன்றிற்காக மட்டக்களப்புக்கு காலையிலேயே பிரயாணித்துவிட்டோம் மீண்டும் வீடு திரும்பி வந்து பார்த்தபோது எமது வீட்டின் பின் புறக் கதவு திறந்திருந்தது பின்னர் வீடும் அலங்கோலமாக கிடந்தது அலுமாரி கதவுகளும் திறந்தவாறு கிடந்தன வைத்துச் சென்ற அனைத்து நகைகளும் களவாடப் பட்டுள்ளதனை கண்டு பேரதிர்ச்சியுற்றேன் பின்னர் 119 பொலிஸ் பிரிவிற்கு அழைத்து தகவல் தெரிவித்தேன். என்றார்.

அங்கே குழுமியிருந்த பிரதேச இளைஞர்களை வினவியபோது....
நன்கு தெரிந்த பழகிய ஒருவரின் தகவல் அடிப்படையிலேயே இந்த திருட்டுச் சம்பவம் இடம் பெற்றிருப்பதாகவும் சந்தேகத்துக்கிடமான நபரொருவர் அப் பகுதியில் நடமாடியதாகவும் உள்ளே வேறொரு நபர் புகுந்து கட்டிலுக்கடியில் மறைத்து வைக்கப் பட்டிருந்த பல இலட்சம் பெறுமதியான நகைகளை திருடிச் சென்றுள்ளனரெனவும் தெரிவித்தனர்.

இதே வேளை சம்பவத்துடன் தொடர்புடையவர்களை விரைவில் இனங்கண்டு விசாரணைகளை மேற் கொண்டு கண்டு பிடிப்பதாக களுவாஞ்சிகுடி குற்றத்தடுப்பு விசேட பொலிஸ் பிரிவினர் கூறினர்.

இருந்தும் உடனடியாக திருடர்களை இனங்காணுவதற்காக தடவியல் பொலிஸ் பிரிவும் மோப்ப நாய்களையும் பயன்படுத்தினால் உடனடியாக கொள்ளையர்களை இனங்காண முடியுமெனவும் மக்கள் தெரிவிக்கின்றனர் அண்மைக்காலமாக இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதனைக் காண முடிகிறது இவ்வாறான சம்பவத்துடன் தொடர்புடையவர்களை பொலிசார் விரைவாக செயற்பட்டு தகுந்த நடவடிக்கை எடுப்பார்களா அவ்வாறு நடவடிக்கை எடுத்தால்தான் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள் இல்லையேல் பயந்து பயந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டிருப்பதனையும் அவதானிக்க முடிகிறது.

சம்பந்தப்பட்ட பொலிஸ் பிரிவினர் அதி துரித நடவடிக்கையினை எடுப்பார்களா?....காத்திருப்போம்.

No comments

Powered by Blogger.