குடும்ப பின்னணி அறிக்கை பெற்றுக்கொள்வதனை இரத்து செய்யவும்!!

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்வதற்காக தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப பின்னணி அறிக்கை பெற்றுக்கொள்வதனை இரத்து செய்யுமாறு அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக வெளிநாட்டுத் தொழில்வாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணாயக்கார தெரிவித்துள்ளார். 

இந்த குடும்ப பின்னணி அறிக்கையை கட்டாயப்படுத்தியுள்ள காரணத்தால் பல்வேறு சிக்கல்கள் உருவாகுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

காலி பகுதியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.