மாலையர்கட்டில் மீண்டும் காட்டு யானையின் தாக்குதல்! அடுத்த உயிர் பறிபோனது!!

போரதீவுப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட றாணமடு (மாலையர் கட்டு) சிவலிங்கம் லயனிதன் வயது18 இன்று 31காட்டுயானை தாக்கத்திற்கு உள்ளாகி மரணமானார். அடுத்த 35ம் கிராமம் தவராசா குணராசா வயது 45 கடந்த புதன்கிழமை அதே காட்டு யானை தாக்கத்திற்கு உள்ளாகி மரணமானார். இதனால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். அப்பிரதேசத்திற்கு பொறுப்பான வனஜீவராசி திணைக்கள தலைவரை அழைத்து பேசியபோது அவர் உடன் நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கின்றார்.என போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் கூறினார்.

இந்த சம்பவத்தினையும் நேற்று முன்தினம் இடம் பெற்ற சம்பவத்தினையும் அதற்கு முந்தைய காலங்களில் யானையின் தாக்குதல்களால் உயிரிழந்த பொதுமக்களின் சார்பாக இனியும் அப்பிரதேசத்தில் வாழும் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் இணைந்து இன்று (31/08/2018 ) வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டமொன்றை செய்யவுள்ளதாக அறியமுடிகிறது.

No comments

Powered by Blogger.