மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


காட்டு யானையின் தாக்குதலில் இறந்த தந்தையின் சடலத்தை வணங்கி புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவி!!

அம்பாரையில் யானையின் தாக்குதலில் பலியான தந்தையின் சடலத்தை வணங்கி இன்று காலை புலமை பரீட்சை எழுத சென்ற சோக சம்பவம்!

நேற்று முன்தினம் அம்பாரை தமண பிரதேசத்தில் துவிச்சக்கர வண்டியில் சென்றவரை காட்டு யானை தாக்கி மரணமடைந்தார்.

இன்று காலை புலமைப் பரிசில் பரீட்சை எழுத செற்றுள்ளார்.

இறந்தவரின் மகளான குறிப்பிட்ட சிறுமி பாடசாலையிலும் வகுப்பிலும் மிகவும் திறமையான மாணவி தந்தை இறந்த சோகத்தில் பரீட்சைக்கு தோற்றாமல் இருந்ததனை அறிந்த அந்த மாணவியின் ஆசிரியைகள் மாணவியின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறி மாணவியை பரீட்சை எழுத கூட்டிச் செல்ல முற்பட்ட போது அச்சிறுமி தந்தையின் சடலத்தின் கால் பகுதியை விட்டு அகலாமல் அழுது கொண்டிருந்தார். 

அப்படியிருந்தும் மாதா, பிதாவுக்கு அடுத்தது குரு என்பதை குறித்த சிறுமிக்கு கற்பித்த ஆசிரியைகள் தன்னம்பிக்கை புத்துணர்ச்சி ஊட்டி வீட்டிலிருந்து பரீட்சை நிலையம் அழைத்துச் சென்று பரீட்சையில் தோற்ற வைத்துள்ளார்கள்.

ஆசிரியத் தொழிலை வகுப்பறை கற்றலோடு மாத்திரம் நிறுத்தாமல் ஒவ்வொரு மாணவருக்கும் தாய் தந்தை போன்று கூடவேயிருந்து மனவெழுச்சிகளை கட்டுப்படுத்த உதவுதல் தமது கடமைகளுக்கு அப்பாற்பட்ட தார்மீக பொறுப்பு என்பதை நிரூபித்திருக்கிறார்கள் இவ் ஆசிரியைகள்.

இம் மாணவியே இக் குடும்பத்தின் மூத்த பிள்ளையாவார் இரு சகோதரிகள் என மிக வசதி குறைந்த ஏழ்மையான இக்குடும்ப சூழலில் இவ்வாறானதொரு சம்பவம் பலரின் மனதினை நெகிழச் செய்திருக்கிறது.

No comments

Powered by Blogger.