மாணவிகளிடம் பாலியல் இலஞ்சம் கேட்ட விரிவுரையாளருக்கு பதவி நீக்கம்!!

பாலியல் இலஞ்சம் கேட்ட தென்கிழக்கு விரிவுரையாளர் ஆலிப் வேலையில் இருந்து சற்றுமுன் நீக்கப்பட்டார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைகள், பாலியல் இலஞ்ச புகார்கள் இருந்தமையினால்தான் மன்றில் பகிரங்கமாக உரையாற்றினேன் என்று உயர்கல்வி அமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ச தெரிவித்தது அனைவருக்கும் தெரியும்.

கல்வி என்பது மதங்களால் போற்றப்படும் ஒன்று, அந்தக் கல்வியை கற்க தூர இடங்களிலிருந்து நம்பிக்கையாக அனுப்பும் போது பெற்றோர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர், அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விரிவுரையாளர்கள் இருக்க வேண்டும், அதை விடுத்து இளம் மாணவியரிடம் பாலியலாக பேசுதல், சீண்டுதல் இலஞ்சம் கோருதல் கண்டனத்திற்குரியது.

பல்கலைக்கழக ஆணைக்குழு இந்த முறைப்பாடு குறித்து கடுமையாக ஆராய்ந்து சற்றுமுன் இந்த ஆலிப் எனும் குறித்த விரிவுரையாளர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார்.

No comments

Powered by Blogger.