மட்டு-மாமாங்கேஸ்வரத்தில் தமிழ் ஓசை பத்திரிகை இலவச வினியோகம்!!

மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆலயத்தின் தொன்மை வாய்ந்த வரலாறு அடங்கிய இம்மாத வெளியீடாக மட்டக்களப்பு மண்ணிலே தொடர்ந்தும் ஒரு வருடத்தை விரைவில் பூர்த்தி செய்யவுள்ள  தமிழ் ஓசை பத்திரிகை இன்றைய தினம் பத்திரிகை குழும உறுப்பினர் திரு. சிவகாந்த் அவர்களினால் மாமாங்கேஸ்வர ஆலய நிர்வாகத்தினரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்து வைக்கப் பட்டது அதனைத் தொடர்ந்து ஆலய நிர்வாகத்தினரால் மக்களுக்கு தமிழ் ஓசை பத்திரிகை இலவசமாக இன்று வழங்கப்பட்டுக் கொண்டிக்கிறது.

மட்டு மண்ணின் பழம் பெரும் ஆலயத்தின் தொன்மைகளையும் சினிமாவை முற்றாக தவிர்த்து ஆன்மீகம், கல்வி, அரசியல் என பல விடயங்களை உள்ளடக்கி மாத இதழாக வெளி வந்து கொண்டிருக்கிறது தமிழ் ஓசை இந்த ஓசை தொடர்ந்தும் மட்டு தமிழர்களின் ஓசையாக ஒலித்திட அனைத்து இளைஞர் யுவதிகளின் கரங்கள் இணைய வேண்டும் அந்த நாட்களை விரைவில் எதிர் பார்த்து தொடர்கிறது தமிழ் ஓசை.

No comments

Powered by Blogger.