திருடர்களின் கூடாரமாகியுள்ளதா? வடகிழக்கு மாகாண கல்வித்திணைக்கள ஊழியர் நலன்புரி கூட்டுறவு சங்கம்!!

அப்பாவி ஆசிரியர்களின் பணத்தில் ஏப்பம் விடும் திருடர் கூட்டத்தினை கண்டும் காணாததுமாக கூட்டுறவு திணைக்களம் கண்மூடி கணக்காய்வு
வடகிழக்கு மாகாண ஊழியர் நலன்புரி சங்கத்தில் பல காலமாக ஊழல்கள் நடந்து வருகின்றது. இதன் தலைவராகவும் செயலாளராகவும் மாறி மாறி ஆனந்தசிவம், கீதபொன்கலன் இருந்துவருவதால் இவர்களுடைய ஊழல் வெளிவரவில்லை. இவர்கள் நலன்புரி சங்கத்தில் உள்ள ஊழியர்களின் பெயரில் அவர்களிற்கே தெரியாமல் போலி ஆவணங்களை தயாரித்து சங்கத்தில் கடன் பெற்றுள்ளார்கள். இவ்வாறு திருட்டுத்தனமாக பெற்ற பணம் கந்து வட்டிக்காரர்களின் மூலம் அதிக வட்டிக்கு கொடுக்கப்பட்டுள்ளது சில காலங்களின் பின்பு இவர்களிற்கே தெரியாமல் இப்பணம் மீளசெலுத்தப்பட்டுள்ளது அத்துடன் சங்கத்திற்கு நியாயமாக வரவேண்டிய வட்டிப்பணம் முழுமையாக செலுத்தப்படவில்லை. 
இவர்கள் கொடுப்பனவு மற்றும் பெறுகைகளிற்கான F10 பற்றுச்சீட்டு போலியாக தயாரிக்கப்பட்டுள்ளது அத்துடன் பல ஆசிரியர்களின் கையொப்பமும் போலியாக இடப்பட்டுள்ளது. 
போலியாக கடன்பெறப்பட்டஆசிரியர்களின் விபரங்கள் 
1.திருமதி. தர்மினி ரஞ்சன் 150000.00
2.செல்வி.யோகராணி கார்த்திகேசு 100000.00
3.திருமதி. சத்தியபிரேமா காந்திநாதன் 150000.00
4.திருமதி. மேரி ரத்திக்கா கிருஸ்ண 200000.00
5. திருமதி. ஜனகியம்மா சுந்தரலிங்கம் 200000.00
6.ஷாமினி கணேஸ் 200000.00
7.கிரியாதேவி சில்வஸ்டர்
200000.00
8.திரு.சமீம் 200000.00
9.திருமதி. கோணேஸ்வரி 200000.00
10. காளிராஜா 200000.00
திருமதி. முஜீபா 200000.00
ஆகியோர் தாம் இதுவரையில் கடன் பெறவில்லையெனவும் இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் எழுத்து மூலம் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

மேலும் உண்மையிலேயே கடன் பெற்ற ஆசிரியர்கள் திருப்பிக்கொடுத்தாலும் உடனேயே வரவு வைக்காமல் சில காலம் வட்டிக்கு கொடுக்கப்பட்டு பின்னரே வரவு வைக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் கடன் பெற்ற ஆசிரியர்களின் தொலைபேசி இலக்கங்களும் பதிவேடுகளில்இவர்களால் மாற்றப்பட்டுள்ளது ( 1 -9, 3-8) இதனால் கணக்காய்வாளர்களால் தொடர்பு கொள்ள முடிவதில்லை. 

தலைவர் கீதபொன்கலன், செயலாளர் ஆனந்தசிவத்துடன் சேர்ந்து அங்கே வேலை செய்யும் உஷா, தக்‌ஷனா, மியூரின், தயாநிதி சேர்ந்தே இந்த ஊழல்கள் நடந்துள்ளது. 2007 ஆண்டிலிருந்து நடைபெற்றுவரும் இந்த ஊழல் சம்மந்தப்பட்ட 46/1 விசாரணை அறிக்கை மூடி மறைக்கப்பட்டுள்ளது. இதனை மறைப்பதற்கு தலைமைக்காரியாலய கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர்(ACCD) திருமதி.ராஜினி துணைபோயுள்ளார். 

கூட்டுறவு சங்கத்தில் உள்ள பல ஊழல்களை விசாரித்தனால்தான் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் (CCD) திரு. சர்மா மாற்றப்பட்டு செரீப் நியமிக்கப்பட்டுள்ளார். 
இன்னும் பல ஊழல்கள் கிண்டப்படும்......
பாகங்கள் தொடரும்.....

அன்வர் பாஷா


No comments

Powered by Blogger.