அடுத்த தேர்தலை எதிர் நோக்கி காத்திருக்கும் வீதிகளில் இதுவும் ஒன்று!!

தேர்தல் ஒன்றைக் காத்திருக்கும் செட்டிபாளைய வீதி...இங்கு வாழும் மக்கள் காத்திருந்து களைத்து போய்விட்டனர் அன்பார்ந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களே, அரசியல் வாதிகளே மற்றும் அரச அதிகாரிகளே!

செட்டிபாளையம் கிராமத்திலுள்ள வீதியின் பரிதாப நிலையினையே இங்கு புகைப்படமாக தரவேற்றியுள்ளோம் பல வருட காலமாக இவ் வீதியானது இவ்வாறான நிலையிலே குன்றும் குழியுமாக இருகின்றது இதனை யாரும் கண்டு கொள்ளவும் இல்லை புனரமைப்பு செய்வதற்கு முன்வரவுமில்லை மழை காலங்களில் இவ் வீதியினால் செல்லவும் முடியாது இவ் வீதியானது செட்டிபாளைய கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு செல்லும் பிரதான வீதியாகும். தேர்தல் காலங்களில் வருபவர்கள் இவ் வீதியினை புனரமைத்து தருவதாக கூறிவிட்டு சென்றால் பிறகு வருவதே இல்லை என பகுதி வாழ் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர் .

இவ் விடயங்களை கவனத்தில் கொண்டு இவ் வீதியினை புனரமைத்து தருமாறு இவ் வீதியிலுள்ள பொது மக்களின் அன்பான வேண்டுகோள் செட்டிபாளைய கிராம வீதி மட்டுமல்ல பல ஊர்களின் முக்கிய வீதிகளின் நிலை இவ்வாறே காணப்படுகிறது அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் சற்று கவனமெடுத்தால் நல்லது...

(இவ் வீதியானது செட்டிபாளைய பிரதான வீதியில் அமைந்துள் சயன் ஹாட்வெயாருக்கு முன் உள்ள வீதியாகும் )

No comments

Powered by Blogger.