இரத்தினபுரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு 80 ரூபாய் நட்டஈடு!!

வெள்ளப்பெருக்கால் வீட்டை இழந்த ஒருவருக்கு நிவாரண நட்டஈடாக 80 ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளமை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வைரலாக பரவியுள்ளது.

இரத்தினபுரியில் அண்மையில் கடுமையான பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணொருவருக்கே இவ்வாறு 80 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

தனக்கு கிடைத்த இழப்பீட்டு தொகையை குறித்த பெண் தனது முக நூலில் பதிவேற்றியுள்ளார்.

பொதுமக்களிடமிருந்து பல்வேறு வரிகளை பெறும் அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 80 ரூபாய் இழப்பீடாக வழங்குவது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.

பொதுமக்களின் வரிப்பணத்தில் கோடிக்கணக்கான பெறுமதியில் அமைச்சர்கள் வாகனங்கள் கொள்வனவு செய்யும்போது நிர்க்கதியான பொது மக்களுக்கு 80 ரூபாய் நட்டஈடு வழங்குவது மிகவும் அநீதியானது என கண்டனங்கள் எழுந்துளளன.

No comments

Powered by Blogger.