கொக்கட்டிச் சோலை தான்தோன்றி ஈஸ்வரத்தில் அறுவைக்காக மாடு விற்கும் ஈனச் செயல்!!

தவறுகளைத் திருத்த வேண்டிய மதத் தலங்களாலேயே இவ்வாறான துர்ப்பாக்கியமான செயல்களும் அரங்கேறுகின்றன.

இன்று வெள்ளிக் கிழமை(28/09/2018) மட்டு- கொக்கட்டிச்சோலை தான்தோன்றியீஸ்வரர் ஆலயத்தில் இந்துக்களின் புனிதத்தை கெடுக்கும் முகமாக ஆலய நிர்வாக சபையினர் உற்சவகாலத்திலேயே ஆலயத்திற்கென பக்தர்களால் காணிக்கை யாக வழங்கிய மாடுகளை சகோதர இனத்தவருக்கு அறுவைக்காக ஏலத்தில் விற்றுள்ளார்கள் என தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே சமூக அக்கறை கொண்ட படுவான்கரையினை சேர்ந்த இளைஞர்களால் சட்டவிரோத மாடுகடத்தல் அறுவைக்காக மாடுகளை விற்றல் போன்ற செயற்பாடுகள் கண்காணிக்கப்பட்டு தடுக்கப் பட்டும் வருகின்றமை அனைவரும் அறிந்த ஒன்றே.

இது இவ்வாறிருக்கும் வேளையில் முகப்பில் இவ்வாறான தடையுத்தரவு அடங்கிய பதாதையினை வைத்துக் கொண்டு ஆலய நிர்வாகத்தினரின் செயற்பாடானது ஒட்டு மொத்த இந்துக்களை அவமதிக்கும் செயலாக கருதப்டுவதாலும் சமூக வலைத் தளங்களில் பெரும் விமர்சனத்தினை கொண்டு வந்துள்ளது.

கல் நந்தி புல் தின்று சாணம் போட்டு வெள்ளையனை விரட்டிய உண்மை வரலாறு பொருந்திய சிவ பூமியிது ஆனால் ஆலய நிர்வாகத்தினரின் செயற்பாடானது சமூகத்தில் பெரும் கோப அதிர்வினை உண்டு பண்ணியிருக்கிறது.

பெருமளவான பணத்தோடு வங்கிக் கணக்கு நிரம்பிக் கிடக்கும் போது எதற்காக மாடு விற்கும் செயற்பாடு நடை பெற்றது? அதுவும் உற்சவ காலத்தில் அப்பிரதேசத்திலேயே யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களை இனங்கண்டு அவர்களுக்கு இறைவனின் பரிசாக வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக ஒவ்வொரு மாட்டினை இலவசமாக வழங்கினால் என்ன? எதற்காக அறுவைக்காக வியாபாரிகளுக்கு விற்க வேண்டும்? என சமூக வலைத் தளங்கள் அதிர்கின்றன.

இனியும் இவ்வாறானதொரு செயற்பாட்டினை முன்னெடுக்காது சமூக முன்னோடிகளாக ஆலய நிர்வாகத்தினர் செயற்படுவார்களா? அல்லது தான்தோற்றியீஸ்வரரின்  முன்னால் தான்தோன்றித்தனமாகத்தான் செயற்படுவார்களா?!

No comments

Powered by Blogger.