மட்டு- சந்திவெளி சமூர்த்தி வங்கியில் இனந்தெரியோதாரால் ஆவணங்கள் எரிப்பு!!

மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் சந்திவெளி சமூர்த்தி வங்கி கட்டிடத்தின் முகாமையாளர் அறைப் பகுதி விஷமிகளினால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

சனிக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. முகாமையாளர் அறையின் ஜன்னல் பகுதி சேதாமாக்கப்பட்டுள்ளது. அறையினுள் பாதுகாப்பாக வைக்கப்பட்ட சமூர்த்தி வங்கி தொடர்பான முக்கிய சில ஆவணங்கள் தீயினால் எரிக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக முகாமையாளரினால் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், பாராளுமன்ற உறுப்பினர் திரு யோகேஸ்வரன் மற்றும் மட்டக்களப்பு சமூர்த்தி பணிப்பாளர் திருமதி அ.பாக்கியராஜா ஆகியோர் இன்று திங்கள் கிழமை (3) சம்பவ இடத்திற்கு சென்று சென்று நிலமைகளை பார்வையிட்டதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டிருந்தனர்.

இன்று திங்கள் கிழமை முதல் வங்கியின் நாளந்த நடைமுறைகள் அனைத்தும் வழமைக்கு திரும்பியதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.