யாழ். குடாநாட்டை அச்சுறுத்திவந்த "ஆவா" குழு உறுப்பினர் கைது!

யாழ். மக்களை மிக நீண்டகாலமாக அச்சுறுத்திவந்த சட்டவிரோத வாள்வெட்டுக் கும்பலாக ஆவாக் குழுவின் முக்கிய உறுப்பினர் மானிப்பாய் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த கைது இடம்பெற்றிருந்த நிலையில், சந்தேகநபர் இன்று யாழ். மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

கொக்குவில் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரை பொலிஸார் கடந்த ஆறு மாதக் காலமாக தேடி வந்த நிலையில் நேற்று சிக்கியுள்ளார்.

குறித்த சந்தேகநபர் ஆவா குழுவின் தனுரொக் என்பவருடன் நெருங்கி செயற்பட்டதுடன் யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு வன்முறை மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் இந்த இளைஞனுக்கு தொடர்புள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கொக்குவிலில் உள்ள தனது காதலியை பார்ப்பதற்கென நேற்று வருகை தந்திருந்த போது, ரயில் நிலையத்தில் வைத்து பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து கூரிய ஆயுதமொன்றும் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.