மட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா?இல்லை மகுடிக்கு கட்டுப்பட்டாரா?!!

மட்டு- இலங்கை போக்குவரத்து சபை பற்றிய திடுக்கிடும் பல திகிலான விடயங்கள் தற்போது வெளி வந்துள்ளன இலஞ்சம்,தனக்கு ஆதரவானவர்களை வைத்து கட்டப் பஞ்சாயத்து, அரசியல் கபடி விளையாட்டு,தனி நபர் பழிவாங்கல்,சட்டவிரோதமான மற்றும் தகுதியற்ற பணி நியமனம்,திடீர் பழிவாங்கல் இடமாற்றம் என பட்டியல் நீளமாகிக் கொண்டே வருகிறது பிரபல அரசியல் அடி வருடி யொருவரின் கட்டுப்பாட்டிலேயேதான் மட்டு இ.போ.ச பிரதான முகாமையாளரும் அவருடன் சார்பான சிலரும் இயங்குவதாகவும் எமது முதற் கட்ட ஊடுருவல் மூலம் அறிய முடிகிறது.

போக்குவரத்து சேவை என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் பிரதான காரணிகளில் ஒன்று அதுவும் மட்டு நகருக்கே உரித்தான வளம் சேர்க்கும் பிரதானமும் பெருமையாக பேசப்பட்டும் பாராட்டப்பட்டும் வந்த பஸ் டிப்போவின் இன்றைய நிலை அதல பாதாளத்தில் உள்ளதனை அறிய முடிகிறது அதனை பிரித்து மேய்ந்து ஏப்பம் விடும் வரை மட்டு மக்கள் மௌனிகளாக இருப்பது பொருத்தமற்ற ஒரு விடயம்; உணர்வுள்ள முன்னேற்றத்தை கொண்டு வரவேண்டும் என பாடுபடுபவர்களை ஓரம் கட்டிவிட்டு தமது கொள்ளைக்கும் கொள்கைக்கும் ஆதரவளிக்கும் கரங்களை வலுவூட்டும் நடவடிக்கையினை தற்போது கண்மூடித்தனமாக மட்டு இ.போ.ச முகாமையாளர் நிறைவேற்றி வருவதாகவும் இந் நிலையில் மாற்றம் உடனடியாக சம்பந்தப் பட்ட அதிகாரிகள் கலந்தாலோசித்து அண்மையில் காழ்புணர்வின் பேரில் பணி நீக்கம் செய்யப்பட்டு வேறு டிப்போவிற்கு மாற்றம் செய்யப்பட்ட சேவை மனம்பான்மையுள்ள சேவையாளர்களை மீள இணைத்தும் முகாமையாளர் தனது காலினை தொட்டு வணங்கினால்தான் கடமையில் இணைப்பேன் என்று கூறி கடமை நிறுத்தம் செய்து வைக்கப்பட்டுள்ள சாரதியினையும் உடனடியாக பணியில் இணைத்து மட்டு இ.போ.சபை இயங்காவிடில் நேரலையாக ஜனாதிபதி மற்றும் போக்குவரத்து அமைச்சரின் பார்வைக்கு பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மற்றும் பணியாளர்களின் வாக்கு மூலங்களும் செய்திப் பிரிவினரால் சேகரிக்கப்பட்ட ஆவணங்களும் திறந்த வெளியில் பகிரங்கமாக வெளிவரும் என்பதனையும் தெரிவிப்பதோடு..

தற்போதைய இ.போ.சபைக்குள் புகுந்து மூளைச் சலவை செய்து தன்னை பெரும் அரசியல்வாதியென மார்தட்டும் நபரின் இலஞ்சம் வாங்கல்கள் இந்திய இராணுவ வருகைக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்ட மட்டு களஞ்சிய சாலை சம்பந்தமான ஆவணங்கள் அனைத்து விபரங்கள் உள்ளடங்கலாக வெளிவருமென்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments

Powered by Blogger.