கணித பாட புத்தகம் கொண்டு வராததால் ஆசிரியர் செய்த செயல்: மாணவன் வெளியிட்ட காணொளியால் பரபரப்பு


செங்கலடி மத்திய கல்லூரியில், கணிதபாட புத்தகம் கொண்டு வராததன் காரணத்தினால் மாணவரொருவரை ஆசிரியர் கடுமையாக தாக்கியுள்ளார்.

செங்கலடிப் பகுதியைச் சேர்ந்த தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் புத்தகம் கொண்டுவரவில்லை என்பதற்காக குறித்த மாணவனை ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளதாக அம் மாணவன் காணொளி ஒன்றின்மூலம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பாடசாலையில் கணிதபாட ஆசிரியராக கடமைபுரியும் ஏறாவூரைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தனது நெற்றியில் பலகையால் ஆசிரியர் தாக்கினார் எனவும், இதன் காரணமாக தனக்கு எட்டுத் தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்தும் தான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த மாணவன் காணொளி மூலம் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.