ருபெல்லா நோய் அற்ற நாடாக இலங்கை தெரிவுமீஸில்ஸ் என்ற ருபெல்லா நோய் அற்ற நாடாக இலங்கையை உலக சுகாதார ஸ்தாபனம் நேற்று அறிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

சுகாதார அமைச்சின் செயலாளர் நிப்புன் ஏக்கநாயக்கவின் தகவல்படி, ருபெல்லா நோயற்ற நாடாக இலங்கையை அறிவிக்கும் சான்றிதழ், உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்னாசிய பணிப்பாளர் பூனம் கெட்ராபால் சிங்கினால், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் புதுடில்லியில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இலங்கை மலேரியா அற்ற நாடாக 2015ஆம் ஆண்டும், யானைக்கால் அற்ற நாடாக 2016ஆம் ஆண்டும், பிறந்த பிள்ளைகளுக்கு ஏற்படும் ஏற்புவலி என்ற நியோனேட்டல் டெட்டேனஸ் என்ற அற்ற நாடாக 2017ஆம் ஆண்டும் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.