பெண் விரிவுரையாளர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலையில் சந்தேக நபர் ஒருவர் கைது!!


பெண் விரிவுரையாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் திருகோணமலை சங்கமித்த கடலோரப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பெண்கள் பயன்படுத்தும் கைப்பை ஒன்றை எடுத்துச் சென்று கொண்டிருந்த போது, பொலிஸாரால் சோதனை செய்யப்பட்டதையடுத்து அதில் இருந்து ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் நேற்று திருகோணமலை நகர கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

வவுனியா, ஆசிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த நடராசா போதநாயகி (29) வயது என்ற கவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவியான கர்ப்பிணி பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.