மட்டு- மாநகர சபை உறுப்பினரை தாக்க வந்த இனந்தெரியாத நபர்கள் வேறொருவரை தாக்கி விட்டு தப்பியோட்டம்!!

மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் 12 வட்டாரத்தை சேர்ந்த ஜெயக்குமார் (ஜெயா) மீது இனந்தெரியாத நபர்கள் பொல்லுகளுடன் தாக்குதல் மேற்கொள்ள வந்த வேளை அவர் இல்லாத காரணத்தினால் அவ்விடத்தில் நின்ற மரணசங்கத்தின் பொருளாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது தாக்குதலில் காயமடைந்த பூ.இந்திரன்அவர்கள் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவத்தின் பேரில் ஒருவர் காத்தான்குடி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஏனையவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.