கொக்கட்டிச்சோலையில் இருந்து முச்சக்கர வண்டியில் சட்டவிரோதமாக மாடு கடத்திய நபர்கள் மடக்கிப்பிடிப்பு!!

பட்டிப்பளைப் பிரதேசத்தில் சட்டவிரோத மாடு கடத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்ற நிலையில் இன்று மீண்டும் மாடு கடத்திய இரண்டுகாத்தான்குடியை சேர்ந்த நபர்கள் மற்றும் மாடு விற்பனை செய்த பண்டாரியாவெளியைச் சேர்ந்த நபரும் சமூக அக்கறை கொண்ட இளைஞர்களினால் மடக்கிப்பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் கடத்தல்காரர்களை ஒப்படைத்துள்ளனர், மற்றுமொரு முதலைக்குடாவை சேர்ந்தவர் தப்பியோடியுள்ளார் முச்சக்கர வண்டியும் பசு மாடும் தற்பொழுது பொலிஸ் நிலையத்தில் உள்ளது. குறித்த இடத்திற்கு பட்டிப்பளை பிரதேச சபை உறுப்பினர் கிரேஸ்குமார் வருகைதந்து பொலிசாருடன் கலந்துரையாடி மாடு கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
No comments

Powered by Blogger.