ஐந்து வருடங்களின் பின்னர் பெற்றோருக்கும் பாடசாலைக்கும் சாதனையை நிலைநாட்டிய மாணவி!

                                                                                        - க.விஜரெத்தினம் -
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கஸ்டப்பிரதேசமான நாற்பதாம் கிராமத்தில் அமைந்துள்ள அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 5 வருட இடை வெளியின் பின்னர் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் ஒரு மாணவி சித்தியடைந்துள்ளதாக அப்பாடசாலையின் அதிபர் க.சந்திரகுமார் தெரிவித்தார்.

அப்பரீட்சையில் 166 புள்ளிகளைப் பெற்று தங்கவேல்-திவாணுஜா என்ற மாணவியே சித்தி பெற்றுள்ளார். இந்நிலையில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 70 புள்ளிக்கு மேல் 52 வீதமான மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதாகவும் அதிபர் மேலும் தெரிவித்தார்.

மாணவர்களையும் அதிபர் க.சந்திரகுமார் பிரதிஅதிபர் சி.பேரின்பமூர்த்தி கற்பித்த ஆசிரியர்களான த.சத்தியசீலன் மற்றும்.திருமதி.நி.நித்தியேஸ்வரனுக்கும் கல்விச் சமூகம் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.