பாரதி ராஜா மட்டக்களப்பில் செல்பி ராஜாவாக்கப்பட்டார்!!நேற்றைய தினம் இந்தியாவிலிருந்து வருகை தந்து யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களின் தேவையற்ற கேள்வியால் கோபமடைந்து ஊடகச் சந்திப்பை நிறுத்தி விட்டு அடுத்த கலை நிகழ்வு கௌரவிப்பு என்று முடிந்ததும் மட்டக்களப்புக்கு வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அவர் வந்த காரணம் மற்றும் அழைப்பிதழில் பிரசுரிக்கப்பட்டபடி நிகழ்ந்ததா? என்பது கேள்விக்குறி ஆம் விசேட தேவையுடைய மாற்றுத் திறனாளிகள் சிறுவர்களது கலை நிகழ்வு நிறுத்தப் பட்டு பாரதிராஜாவால் இயக்கப்படும் "ஓம்" எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் காண்பிப்பதற்காக செங்கலடி திரையரங்குக்கு திசை திருப்பி கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு தொடர்ந்தும் கௌரவிப்பு என்ற பெயரில் தகுதிக்கு புறம்பானவர்கள்,நிகழ்வினை ஒழுங்கு படுத்தியவருக்கு நெருக்கமானவர்கள் பெயருக்கு சில பழமை இலக்கியவாதிகள் என கௌரவிக்கப்பட்டுள்ளமை தொடர்பாகவும் அடுத்து பாரதிராஜாவை செல்பி ராஜாவாக்கி பாத பூஜையும் செய்து பார்த்திருக்கிறார்கள் மட்டு வாழ் இரசிகப் பெருமக்கள்.

தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலரும் இந்த நிகழ்வினைக் கண்டித்தும் விமர்சித்தும் முக நூல் இணையத்தள வாயிலாக கருத்துப் பதிவுகளை இட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

No comments

Powered by Blogger.