மண்டூர் பாடசாலையொன்றின் மாணவி துஸ்பிரயோகம்! ஆசிரியர் கைது!!

                                                                                   - க.விஜயரெத்தினம் -
மண்டூர் பகுதியில் பாடசாலை மாணவிக்கு கையடக்கதொலைபேசி வாங்கி கொடுத்தும்,ஆசை வார்த்தைகளை விதைத்தும் மாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர் கைது.ஆசிரியரை தடுத்து வைத்து துருவித்துருவி விசாரணை. மாணவி மருத்துவ பரிசோதனைக்குவைத்தியசாலையி அனுமதி.

வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மண்டூர் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் 16 வயது மாணவி ஒருவருக்கு ஆசைவார்த்தைகள் விதைத்தும், பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 32 வயதுடைய ஆசிரியர் ஒருவரை வெள்ளிக்கிழமை(19.10.2018) இரவு கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

மண்டூர் பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 11 கல்வி கற்றுவரும் மாணவியை அப்பாடசாலையில் கடமையாற்றிவரும் அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவணையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 32 வயதுடைய ஆசிரியர் நீண்ட நாட்களாக பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்துள்ளார் என பாதிக்கப்பட்ட சிறுமி சம்பவதினமான வெள்ளிக்கிழமை இரவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த ஆசிரியரை பொலிஸார் கைது செய்தனர்.

இதேவேளை குறித்த மாணவியின் தாயார் பிள்ளையின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு வெளிநாட்டிற்கு வேலைக்காக சென்றதனால் பாதிக்கப்பட்ட மாணவி அவரது அம்மம்மாவுடன் வாழ்ந்துவருகின்றார்.இந்த நிலையில் குறித்த ஆசிரியர் சிறுமிக்கு கையடக்கத் தொலைபேசி ஒன்றை வாங்கி கொடுத்தும் அதனூடாக சிறுமிக்கு ஆசை வார்த்தைகளை விதைத்தும்,பாடசாலையில் சனி ,ஞாயிறு கிழமைகளில் நடக்கும் பிரத்தியேக கல்வி நடவடிக்கையின் போது பாடசாலையில் வைத்தும், ஏனைய இடங்களுக்கு வரவழைத்தும் பாலியல் துஷ்பிரயோம் மேற்கொண்டுவந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைளகளில் இருந்து தெரியவந்துள்ளது.இச்சம்பவம் நடைபெற்ற பிரதேசமானது பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறமாகவும்,சிறுவர் நன்நடத்தை திணைக்களத்தின் ஆலோசனைகள்,வழிகாட்டல்கள்,குற்றவியல் விடயங்கள், சட்ட ஒடுங்கு டயங்கள் தெளிவூட்டப்படாத பிரதேசமாகவும் காணப்படுவதாக பொதுமக்கள்,பாடசாலை மாணவர்கள் கவலை தெரிவிக்கின்றார்கள்.

கைதுசெய்யப்பட்ட ஆசிரியரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.