மூதூர் பிரதேச செயலாளர் பிரிவு முன்னம் போடி வெட்டை கிராமத்தில் அறநெறிப் பாடசாலை மீளவும் ஆரம்பம்!!

சமூகசேவையில் ஆர்வம் கொண்டு தன்னாலான சேவையினை செய்து கொண்டுவருபவரான புனிதராஜ் அவர்களின் அயராத முயற்சியின் பயனாக மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முன்னம்போடி வெட்டையில் இன்று ஸ்ரீ வழிவிடு விநாயகர் அறநெறிப் பாடசாலை ஆலய பூசகரின் ஆசியுடன் ஆலய தலைவர் தலைமையில் மீள ஆரம்பிக்கப்பட்டது. சமூகத்தில் இளம்சந்ததியினர் சமய விழுமியங்களை பேணிப்பாதுகாத்து சிறந்த நற்பிரஜைகளாக உருவாக்க இந்த அறநெறிகளின் பங்கு முக்கியத்துவம் வகிக்கின்றது எனவே இந்த அறநெறி பாடசாலை மாணவர்களை ஊக்குவிக்க நல்லுள்ளம் கொண்ட சமய ஆர்வலர்கள் ஆலய பரிபாலன சபையுடன் தொடர்பு கொண்டு சமயப்பணிக்காக தங்களால் ஆன பங்களிப்புக்களை செய்து உதவிடவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறார்கள்.

No comments

Powered by Blogger.