அதிரடியாக களமிறங்கி மட்டு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சரஸ்வதி பூசை செய்ய ஆவன செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன்!!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதிய மாணவர்களை நவராத்திரி விழா கொண்டாட தடை விதித்தமையை கண்டித்து இன்று தாதிய கல்லூரிமாணவர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர் 

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வருகைதந்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் வைத்தியசாலை பணிப்பாளருடன் கலந்துரையாடி சுகாதார அமைச்சின் அலுவலகத்தை தொடர்புகொண்டு போதனாசிரியரை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை 47 வைத்திய சிகிச்சைப் பிரிவுகளிலும்!
தாதியபாடசாலை ஆலயத்திலும் நவராத்திரி பூஜை சிறப்பாக இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இணைப்புச் செய்தி ...01

சற்று முன்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதிய மாணவர்களை நவராத்திரி விழா கொண்டாட தடை விதித்தமையை கண்டித்து இன்று தாதிய கல்லூரிமாணவர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர் 

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வருகைதந்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் வைத்தியசாலை பணிப்பாளருடன் கலந்துரையாடி சுகாதார அமைச்சின் அலுவலகத்தை தொடர்புகொண்டு போதனாசிரியரை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அவர் கொழும்பிற்கு மாற்றம் பெறுகின்றார் என அதிபர் அறிவித்துள்ளார்.

இணைப்பு செய்தி...02

தாதிஆசிரியர் இடமாற்ற விடயம் முகநூல் போராளிகளின் முயற்சியே காரணம் என சமூக வலைத்தள போராளிகள் பதிவிட்டதோடு மட்டுமல்லாது யாரும் இந்த விடயத்துக்கு உரிமை கோர வேண்டாமென்றும் தொடர்ந்தும் பதிவுகள் வெளி வந்தவண்ணமுள்ளன
எனவே யார் செய்தால் என்ன நல்ல சம்பவம் ஒன்று நிறைவேறியுள்ளது என்று பொது மக்கள் கருத்துகள் தெரிவிக்கின்றது.

No comments

Powered by Blogger.