இப்படியும் ஆசிரியர் ஒருவர் மாணவனை தாக்குவதா?!

மட்டக்களப்பு - செங்கலடி மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் ஆசிரியரின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகி உள்ளார்.

குறித்த சம்பவத்தில் தரம் 6 இல் கல்வி பயிலும் 11 வயதுடைய சந்திரன் தருனேன் என்ற மாணவனே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொம்மாதுறையை சேர்ந்த திவ்யதேவ் என்ற ஆசிரியரே குறித்த மாணவனின் கன்னத்தில் மிருகத்தனமாக தாக்கியுள்ளார்.

இதேவேளை, கடந்த மே மாதமும் குறித்த பாடசாலையில் ஆசிரியர் ஒருவரின் தாக்குதலுக்கு மாணவர் ஒருவர் இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அதே பாடசாலையில் மீண்டும் இவ்வாறான ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளமை குறித்து அனைவரும் விசனம் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.