மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்கள் விவாதச்சமரில் தேசிய ரீதியில் மூன்றாம் இடம்!!

                                                                                  - க.விஜயரெத்தினம் -
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்கள் விவாதச்சமரில் தேசியரீதியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.

தேசிய மனநல நிறுவகத்தினால் உலக உளநலதினத்தை முன்னிட்டு இவ்வாண்டு(2018) பாடசாலை மாணவர்களுக்கிடையில் நாடளாவிய ரீதியில் மும்மொழியிலும் நடாத்தப்பட்ட விவாதச்சமரில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி அணியினர் வெற்றி பெற்று அகில இலங்கை ரீதியில் 3 ம் இடத்தை தட்டிக்கொண்டார்கள். 
கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பல பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டபோதிலும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்களே விவாதப்போட்டியில் வெற்றி பெற்று மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கும்,பெற்றோர்களுக்கும்,மட்டக்களப்பு வலயத்திற்கும்,கிழக்கு மாகாணத்திற்கும் பெருமையையும் புகழையும் ஈட்டித்துள்ளார்கள்.

இவர்களுக்கு சான்றிதழ்களும்,பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் மாணவர்களான எம்.எஸ்.ஏ.சுலைம்,எஸ்.திவாகர்,ஆர்.திவேக்ஷன்,த.ரனுஷன் ஆகியோர்களுடன் தமிழ்பாட ஆசிரியையான திருமதி.ரமாபிரபா தனராஜ்,ஆகியோர்களுடன் கல்லூரியின் முதல்வர் இராஜதுரை-பாஸ்கர்,பிரதி அதிபர்களான ச.சதீஸ்வரன்,இ.இலேங்கேஸ்வரன் ஆகியோர்கள் இருப்பதை படத்தில் காணலாம்.

இவ்வாறான புறக்கிருத்திய செயற்பாடுகளில் மாணவர்களை ஊக்கப்படுத்திய ஆசிரியைக்கும்,விவாதப்போட்டியில் பங்குபற்றி மாணவர்களுக்கு அதிபர் இராஜதுரை-பாஸ்கர் தலைமையிலான பாடசாலை நிருவாகத்தினர்,பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர்,பழைய மாணவர் சங்கத்தினர் இவர்களை பாராட்டி கௌரவித்தார்கள்.

No comments

Powered by Blogger.