12 இலட்சம் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் மூவர் கைது!!

மினுவங்கொட பகுதியில் 4008 ட்ரமடோல் மாத்திரைகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

22, 48 மற்றும் 37 வயதுடைய ராகம மற்றும் கொட்டுகொட பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மாத்திரைகள் 12 இலட்சம் ரூபா பெறுமதியுடையவை என தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் மினுவங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.